Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஐயோ பெரும்பாவத் தாங்கமைந்தோ மாதலினான் 
மெய்யோருஞ் சுற்றத்தை வீழ்த்துதலால் – வையோவாச் 
சத்திரத்தால் வீண்கையெனைத் தாந்தடிவரேன்மாற்றா 
ரத்திரத்தா லஃதே கடன்.    1.33

மெய் ஓரும் சுற்றத்தை

உண்மையாகவே (நாம்) அறிந்த உறவினரை

வீழ்த்துதலால்

அழிப்பதால்

பெரும் பாவத்து அமைந்தோம் ஐயோ

பெரும் பாவம் செய்யத்துணிந்தோம்

ஆதலினால்

ஆகையால்

மாற்றார்

எதிரிகள்

வீண்கைஎனை

ஆயுத மற்ற என்னை

வை ஓவாச் சத்திரத்தால்

கூர்மை நீங்காத ஆயுதங்களாலும்

அத்திரத்தால்

அம்புகளாலும்

தாம் தடிவரேல்

தாமே கொல்லுவராகில்

அஃதே கடன்

அதுவே நன்மை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top