Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மீது மவர்பிதுக்கள் வீழ்வர் மிகுபழியாற் 
சாதி குலதன்மந் தானழியு – மாதலினா 
னீங்கா நிரயத்து நிற்பவ ரென்றுரைக்கும் 
பாங்கார் சுருதிப் பயன்.      1.32

மீதும்

மேலும்

அவர் பிதுக்கள்

குலத்தையழித்தவர்களுடைய பித்ருக்கள்

வீழ்வர்

கீழுலகங்களில் விழுவர்

மிகுபழியால்

(முற்கூறிய) மிகுந்த தோஷங்களால்

சாதி குல தன்மம் தான் அழியும்

சாதி தர்மங்களும், குலதர்மங்களும் தாமே அழியும்

ஆதலினால்

இக்காரணங்களால்

நீங்கா நிரயத்து நிற்பவர்

மீளமுடியாத நரகத்தில் (அவர்கள்) வஸிப்பார்கள்

என்று

என்று

பாங்கு ஆர் சுருதி பயன் உரைக்கும்

சிறப்புடைய வேதசாஸ்திரங்கள் உரைக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top