Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

குலங்குறையின் மாளுங் குலத்தறங்கண் மீது
விலங்கு நெறியமுக்கி மேலா – நலங்குலைந்து 
மாதர் நெறியழிவர் வண்ணங் கெடுமதுவே 
போத நரகப் புணர்ப்பு.       1.31

குலம் குறையின்

குலம் அழிந்ததாகில்

குலத்து அறங்கள் மாளும்

குலதர்மங்கள் அழியும்

விலங்கு நெறி

விலக்கத்தக்க அதர்மங்கள்

மீது அமுக்கி மேல் ஆம்

(குலத்தின்) மீது சூழ்ந்து வெற்றிகொள்ளும்

மாதர்

குலப்பெண்கள்

நலம் குலைந்து

குணங்கள் அழிந்து

நெறி அழிவர்

கற்புநெறி தவறுவர்

வண்ணம்

நாலுவர்ணங்களும்

கெடும்

அழிந்துபோகும்

அதுவே

அந்த வர்ணக்கலப்பே

போதநரகப் புணர்ப்பு

சாஸ்திரங்களில் அறியப்படும் நரகத்திற்குக் காரணமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top