Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கோதில் குலஞ்செற்ற குற்றங் குலக்கேளைக் 
காதி வரும்பாவங் காணாத – வேதிலர்க 
ளீங்கிவர்க ளேலு மிஃதறிந்த யாந்தவிர்த 
லாங்கிசைகை யான வமைவு.   1.30

கோது இல்

குற்றமற்ற

குலம்

குலத்தை

செற்றகுற்றம்

அழித்த பாவத்தையும்

குலக்கேளை காதிவரும் பாவம்

குலத்தின் நண்பர்களுக்குத் தீங்கிழைப்பதனால் உண்டாகும் பாவத்தையும்

காணாத

அறியாத

ஏதிலர்கள்

பகைவர்களாக

ஈங்கு இவர்களேலும

இங்குள்ள துரியோதனாதியர் இருந்த போதிலும்

இஃது அறிந்த யாம்

இப்பாவங்களை அறிந்த நாங்கள்

ஆங்கு தவிர்தல் இசைகை

அறிந்தபின்பு மீள இசைவதே

ஆன அமைவு

பொருத்தமானதாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top