Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முதல் அத்யாயம் - அர்ஜுன விஷாத யோகம்

அத்தியாயார்த்தச் சுருக்கம்

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீண்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர் விசய
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.   1.0

வேண்டிடத்தில் அன்றி

தகாத இடத்தில்,

நலம் இரக்கம் பூண்டு

அன்பையும் கருணையையும் கொண்டு

வெறுத்து

(யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து

அவற்றை

அந்த ஸ்வதர்மங்களை

பொல்லா புலம் என்று

தர்மம் அல்லாதவை என்றுகூறி

மீண்டு அகன்று

(யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்

சுற்றம் அது நோக்கியே

(பற்று வைக்கத்தகாத) அந்த உறவினர்களைப்பார்த்து

சோகித்த

வருத்தமுற்ற.

தேர் விசயன்

தேரிலுள்ள அர்ஜுனன்

உற்ற

அடைந்த

மயல்

மயக்கத்தை

முதல் ஓத்து சொல்லும்

முதல் அத்தியாயம் உரைக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top