Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத்-தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.      0.5

திருமால் அருள் கீதை

லக்ஷ்மீநாதனான கண்ணன் அருளிய கீதை விஷயமான

நேயத்து ஓர் எண்ணெய் நிறைவித்து

ஸ்நேஹமாகிற ஓர் எண்ணெயை நிறைய இட்டு

தூய தெருள் நூல் அதே

பரிசுத்தமான அறிவுநூலான அதையே நூலாகக்கொண்டு

நெஞ்சில்

மனத்தில்

இருள் நூற

இருள் அழியும்படியும்

தேயத்தோர் உய்ய

நாட்டிலுள்ளார் உஜ்ஜீவிக்கும்படியும்

பெரிய தீபத்தை

(இந்நூலாகிற) பெரிய விளக்கை

யான்

நான்

ஏற்றுகேன்

எற்றக்கடவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top