Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேதப் பொருளை விசயற்குத் தேர்மீது
போதப் புகன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.    0.4

விசயற்கு

அர்ஜுனனுக்கு

தேர்மீது

திருத்தேர்த்தட்டின்மீது இருந்துகொண்டு

வேதப்பொருளை

வேதத்தின் பொருளை

போத புகன்ற

தெரியும்படியாகச்சொன்ன

புகழ் மாயன்

(அனைவராலும்) புகழப்படும் கண்ணன் அருளிய

கீதைப்பொருள் விரித்த

கீதையின் பொருளை (பாஷ்யத்தின் மூலம்) விளக்கிய

பூதூர்மன்

ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த எம்பெருமானாருடைய

பொன் அருளால் வந்த

அழகிய அருளால் உண்டான

தெருள்

அறிவுமயமான பாஷ்யத்தை

தேர்ந்து

ஆராய்ந்து

அம்தமிழால்

அழகிய தமிழ்ப்பாடல்களாலே

விரிப்பன்

விளக்கிக்காட்டுவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top