Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நாதனருள்புரியு நற்கீதை யின்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்தழைத்த வெண்பாத் தெரிந்து.    0.3

நாதன்

ஸர்வஸ்வாமியான கண்ணன்

அருள் புரியும்

அருளிச்செய்யும்

நற்கீதையின் படியை

சிறந்த கீதையின் ஸ்வருபத்தை

வேதம் வகுத்த வியன் முனிவன்

வேதத்தைப் பிரித்த ஆச்சர்யசக்தியுடைய வியாசமுனிவர்

பூதலத்து

இவ்வுலகிலே

பாரதத்தே காட்டும்

மஹபாரதத்திலே காட்டுகிற

பதினெட்டு ஓத்தும்

பதினெட்டு அத்தியாயங்களையும்

தெரிந்து

ஆராய்ந்து

சீர் தழைத்த வெண்பா

சீர்கள் பொருந்தியிருக்கும் வெண்பாக்களில்

பகர்வன்

உரைப்பேனாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top