Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.    0.12

புலன் பொறியை நீக்கி

விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து

தம் புத்தியினில்

நம் நெஞ்சில்

செம்மை அலம்புரிவார்க்கு

நேர்மைக்குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு

உற்ற

தோன்றும்

உயிர் மாட்சி நலம் புனைந்து

உயிரின் பெருமையிலே நன்றாக ஊன்றி

மான யோகத்து

யோகமுறைகளினாலே

இறையை

(தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய

மன்னுநிலை

நிலைக்கும் நிலையை

காண்பதே

அனுபவித்தலே

ஞானயோகத்தின் நலம்

ஞானயோகத்தின் ஸ்வரூபமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top