Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இத்தகையின் மேலா மறைபொருளை யேவனென்
பத்தரிடை நின்று பரிந்துரைக்கு – மத்தகையோன்
அன்பாற் பரமமாம் பத்தியெய்தி மையமற
வின்பா லெனையடையு மேய்ந்து.         18.68

இத்தகையின்

இப்படிப்பட்ட

மேலாம் மறைபொருளை

மேலான ரஹஸ்யார்த்தத்தை

ஏவன்

எவனொருவன்

என் பத்தரிடை நின்று பரிந்துரைக்கும்

என்னுடைய பக்தர்களிடம் அவர்கள்நெஞ்சில் பதியும்படி வியாக்யானம் செய்கிறானோ

அத்தகையோன்

அப்படிப்பட்ட பெருமையையுடையவன்

அன்பால் பரமமாம் பத்தி எய்தி

(என்னிடம்) அன்பில் இதற்கு மேற்பட்டதில்லை எனத்தக்க பரம பக்தியை அடைந்து

ஐயமற

சந்தேகமில்லாமல்

இன்பால் ஏய்ந்து

பேரானந்தம் பொருந்தப்பெற்று

எனை அடையும்

என்னை அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top