Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இப்பொருளை யில்லாத் தவத்தாற்கு மென்னிடையின்
மெய்ப்பொருளாம் பத்தியிலா வீணற்குஞ் – சொப்படவே
யிச்சையுடன் கேளாற்கு மென்னைப் பொறாதாற்கு
மச்சமுற நீயுரையே லாங்கு.           18.67

இப்பொருளை

இங்கு நான் உரைத்த இந்த சாஸ்த்ரமாகிற ரஹஸ்யார்த்தத்தை

இல்லாத் தவத்தாற்கும்

தவம் செய்யாதவனுக்கும்

என்னிடையில்

என்விஷயத்தில்

மெய்ப்பொருளாம் பத்தியிலா வீணற்கும்

உண்மையான பக்தியில்லாத அஸத்துக்கும்

சொப்படவே இச்சையுடன் கேளாற்கும்

நிறைந்த விருப்பத்துடன் கேளாதவனுக்கும்

என்னைப் பொறாதாற்கும்

என்னைத் துவேஷிப்பவனுக்கும்

ஆங்கு அச்சமுற

இவ்வுலகில் பயம் விளையும்படியாக

நீ உரையேல்

நீ உபதேசித்து விடாதே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top