Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வாறு ஞானமுனக் கிங்கே யெழில்மறையிற்
செவ்வா மறைபொருளைச் செப்பினே- னெவ்வாறு
தன்னியல்வை யாராய்ந்து சார்ந்தெதனை யிச்சித்தாய்
நின்னியல்வாற் செய்நீ நிகழ்ந்து.         18.63

இவ்வாறு

இவ்வண்ணமாக

ஞானம்

பலவகைப்பட்ட ஞானோபதேசங்களில்

எழில் மறையில் செவ்வாம் மறை பொருளை

அழகிய ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான அர்த்தத்தை

உனக்கு

உனக்கு

இங்கே செப்பினேன்

இந்த கீதையில் சொன்னேன்

எவ்வாறும் தன்இயல்வை ஆராய்ந்து

எல்லாவகையாலும் உன் தகுதியை ஆராய்ந்து

எதனை

எந்த உபாயத்தை

நின் இயல்வாய் இச்சித்தாய்

உன் தகுதிக்குத் தக்கப்படி நீ விரும்பினாயோ

அதனை

அந்த உபாயத்தை

சார்ந்து

ஏற்றுக்கொண்டு

நீ நிகழ்ந்து செய்

(அதை) நீ நன்றாக அநுஷ்டிப்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top