Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்ன மறைபொருள் கட் கெல்லா மிகமேலா
மென்னமருஞ் சொல்லி னிறுதிகேள் – முன்னமரு
மிட்டன் றிடனென்னு மித்தா லுனக்கிதமாம்
பட்டதனைச் சொல்வன் பரிந்து.       18.64

இன்ன மறைபொருள்கட்கு எல்லாம்

இதுவரை சொன்ன ரஹஸ்யப் பொருள்கள் அனைத்திலும்

மிகமேலாம்

சிறந்ததாய் இருப்பதான

என் அமரும் சொல்லின் இறுதி கேள்

நான் சொல்லும் இறுதியான வார்த்தையைக் கேட்பாயாக

முன் அமரும் இட்டன் திடன் என்னும் இத்தால்

என் முன் அமர்ந்திருக்கும். மிக இனியவன் என்னும் காரணத்தால்

உனக்கு இதமாப் பட்டதனை

உனக்கு நன்மையென்று எனக்கு எது பட்டதோ அதை

பரிந்து சொல்வன்

பரிவுடன் மறுபடி கூறுகிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top