Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்கரும மல்குணத்தைச் சார்ந்திடினு மிக்கியன்ற
வன்கரும மானவது மற்றொனறி-னன்கதுவாந்
தன்மைசேர் கன்மத்துத் தக்கியல்வான் சார்துயரப்
புன்மைசா ரான்போய்ப் புறத்து.         18.47

தகைருமம் அது

தனக்குரியதான கர்மயோகம்

அல்குணத்தைச் சார்ந்திடினும்

குணமற்றதானாலும்

மிக்கியன்றைவன் கருமமான மற்றொன்றின் நன்கதுவாம்

புலன்களை நன்கு வென்றவனுக்குரிய தர்மமான ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்ததாகும்

தன்மைசேர் கன்மத்து

தனக்கு இயல்வாகவே பொருந்தியிருக்கும் கர்மத்தை

தக்கியல்வான்

தக்கபடி அநுஷ்டிப்பவன்

புறத்துப்போய்

(ஜ்ஞாநயோக நிஷ்டனைப்போல்) நழுவிப்போய்

சார்துயரப் புன்மை சாரான்

ஸம்ஸாரத் துன்பத்தை விளைக்கும் பாபத்தை அடையமாட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top