Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏவன்பாற் பூதங்க ளெல்லாம் பிறந்தியலு
மேவன்றா னிங்க னிடைப்பரம்பு(ம்) – மேவியே
யாங்கவனைத் தன்கருமத் தாலே யருச்சித்தே
யோங்கவவன் சித்தி யுறும்.           18.46

ஏவன்பால்

எந்தப்பரமபுருஷனிடமிருந்து

பூதங்கள் எல்லாம்

எல்லாப் பொருள்களும்

பிறந்து இயலும்

உண்டாகிச் செயல்படுகின்றனவோ

ஏவன்தான்

எந்தப் பரமபுருஷன்

இங்கன் இடைப் பரம்பும்

இந்த எல்லாப் பொருள்களிலும் வியாபித்து நிற்கிறானோ

ஆங்கு அவனை

(இந்திரன் முதலான எல்லாத் தேவர்களுக்கும்) அந்தர்யாமியாயிருக்கும் அந்தப் பரமபுருஷனை

மேவியே

ஆராதிக்கத்தக்கவனாக எண்ணி

அவனைத் தன் கருமத்தாலே

அந்தப் பரமபுருஷனைத் தனக்குரிய வர்ணாஸ்ரம தர்மத்தாலே

அருச்சித்தே

ஆராதனம் செய்தே

அவன்

மனிதன்

ஓங்க சித்தி உறும்

உயர்ந்த மோக்ஷ ஸித்தியை அடைகிறான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top