Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சத்துவத்தி னின்று தவிர்ந்துபயன் சார்ந்தறிவு
தத்துவத்திற் சந்தேகம் தானற்ற – னெத்துவரும்
தீவினையி னல்வினையிற் சேர்வெறுப்பு சங்கமவை
யோவியிருப் பெய்து முகந்து.        18.10

சத்துவத்தில் நின்று

ஸத்வ குணத்தில் நிலைநிற்பவனாய்

பயன் தவிர்ந்து

தான் செய்யும் கர்மங்களில் பல ஸங்க கர்த்ருத்வ த்யாகத்தை உடையவனாய்

தத்துவத்தில் அறிவு சார்ந்து

தத்துவங்களைப்பற்றிய உண்மையறிவை உடையவனாய்

(தத்துவத்தில்) சந்தேகந்தான் அற்றான்

அந்தத் தத்துவங்களைப்பற்றிய ஐயம் நீங்கப் பெற்றவன்

ஒத்துவரும் தீவினையில் நல்வினையில்

ஒன்றாகவரும் விரும்பாப் பலனைத்தரும் பாபகர்மத்திலும் விரும்பும் பலனைத்தரும் புண்ய கர்மத்திலும்

சேர் வெறுப்பு சங்கம் அவை ஓவி

(முறையே) உண்டாகும் துவேஷம் பற்று ஆகியவற்றை விட்டு

உகந்து இருப்பு எய்தும்

(இரண்டிலும்) உகந்து இருப்பான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top