Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காய முடையோன் கருமமெல்லாங் கைவிடுத
லாய வகையங் கரிதாகும் – மேய
பலன்றுறந்தோ னன்றாம் படிதுறந்தோ னென்று
நலஞ்சிறந்தோர் சொல்வர் நயந்து.         18.11

காயமுடையோன்

ஸரீரத்தை தரிக்கும் ஜீவன்

கருமம் எல்லாம் கைவிடுதல் ஆயவகை

எல்லாச் செயல்களையும் கைவிடுவதற்கு உரிய வழி

அங்கு அரிதாகும்

இவ்வுலகில் இயலாது

நலம் சிறந்தோர்

சாஸ்திர அறிவில் சிறந்தவர்கள்

"மேய பலன் துறந்தோன்

கருமத்திற்குரிய பலனைக் கைவிட்டவனே

நன்றாம் படி துறந்தோன்

நன்றாகக் கர்மத்தைக் கைவிட்டவன்

என்று

என்று

நயந்து சொல்வர்

ஆராய்ந்து கூறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top