Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இக்கரும மான விவையென் கருமமென
மிக்கமருஞ் சங்க மிகுபயகை – ளொக்கவிடுத்
தேய்ந்தவியல் வென்றே யியலுமதே யென்றனக்கிங்
காய்ந்த வறுதிமிக வாம்.        18.6

இக்கருமமான இவை

இப்படி உபாஸனத்திற்கு அங்கமாயிருக்கும் இக்கர்மங்களை

என் கருமம் என மிக்கு அமரும் சங்கம்

'இது என்னுடைய கர்மம்' என்று மிகவும் பொருந்தியிருக்கும் பற்றையும்

மிகு பயன்கள்

மிகுதியாக வரும் பயன்களையும்

ஒக்க விடுத்து

ஒருங்கே விட்டு

ஏய்ந்த இயல்வு என்றே இயலுமதே

(ஆயுள் உள்ளவரை) செய்யவேண்டியவை என்னும் எண்ணத்துடன் அநுஷ்டிக்கவேண்டும் என்பதே

என்தனக்கு

எனக்கு,

இங்கு

இவ்விஷயத்தில்,

மிக ஆய்ந்த அறுதி ஆம்

மிகவும் ஆராயப்பட்டதாய் மேலானதான நிர்ணயமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top