Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பாவியசீ ரெச்சம் பயிலுந் தவந்தான
மேவியிக ழாதென்று முற்றியல – மேவினவை
யாவன்பா லாங்கவைதா னான வறிவினர்க்கும்
பாவனமா மென்றும் பயின்று.          18.5

பாவிய சீர் எச்சம்

( முற்கூறிய ) தியாகமனப்பான்மையோடுகூடிய யாகமும்

பயிலும் தவம்

(அந்த மனப்பான்மையோடு) அனுஷ்டிக்கப்படும் தவம்

தானம்

(அத்தகைய) தானம் முதலிய கர்மங்கள்

மேவி இகழாது

அடியோடு கைவிடாது

என்றும் முற்று இயல மேவினவை

எப்போதும் முழுவதும் அனுஷ்டிக்கத்தக்கவை

ஆங்கு அவை தான்

அப்படிப்பட்ட கர்மங்கள்

அன்பால் ஆன அறிவினர்க்கும்

அன்பாகக் கனிந்த அறிவையுடைய உபாஸகர்களுக்கும்

பயின்று

அனுஷ்டிப்பதாலே

என்றும் பாவனமாம்

(எப்போதும் உபாஸனம் நிறைவடைவதற்குத் தடையான பாவங்களைப்போக்கும்) பரிசுத்தச் செயல்களாம்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top