Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கதனா லெச்சந் தவந்தான மாமிவற்றி
லோங்கமருந் தன்னிலையு முற்றவற்றிற் – பாங்கியலுஞ்
சத்தென் றுரைக்கத் தகுமென்று வேதியர்க
ளொத்தேன் றுரைப்ப ருகந்து.        17.28

ஆங்கு அதனால்

முன் ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட வழக்குகளால்

எச்சம் தவம் தானம் ஆம் இவற்றில் ஓங்கு அமரும்தன் நிலையும்

யாகம் தவம் தானம் ஆகியவற்றில் உறுதியாக நிற்கும் தம்முடைய நிலையும்

உற்ற வற்றில் பாங்கு இயலும்

(மூவர்ணத்தவர்களான தமக்கு) விதிக்கப்பட்டவற்றில் நன்கு அநுஷ்டிக்கப்படும் கருமமும்

சத் என்று உரைக்கத் தகும்

'ஸத்' என்று சொல்லத்தகும்

என்று

என்று

வேதியர்கள்

மூவர்ணத்தவர்கள்

ஒத்து ஏன்று

ஒருமுகமாக ஏற்றுக்கொண்டு

உகந்து உரைப்பர்

உகப்புடன் கூறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top