Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உண்மையிலு(ம்) நன்றான வொண்மையிலுஞ் சத்தென்னும்
வண்மையுரை தன்னை மதித்துரைப்பர் – திண்மையுயர்ந்
தேலுங் கருமத்தைச் சற்கரும மென்றுரைப்பர்
மாலும் புகழ்விசயா வாய்ந்து.        17.27

மாலும் புகழ் விசயா

இந்திரனாலும் புகழப்படும் அர்ஜுனனே!

சத் என்னும் வண்மை உரைதன்னை

'ஸத்' என்கிற பல பொருள்களை உடைய சொல்லை

உண்மையிலும்

இருக்கும் பொருள் என்னும் அர்த்தத்திலும்

நன்றான ஒண்மையிலும்

நல்ல பொருள் என்னும் அர்த்தத்திலும்

மதித்து உரைப்பர்

(அறிவாளிகள்) ஆராய்ந்து கூறுவர்

திண்மை உயர்ந்து ஏலும் கருமத்தை

உலகில் காணப்படும் சிறப்புடைய கருமத்தையும்

சற்கருமம் என்று

"ஸத் கர்மம்" என்று

ஆய்ந்து உரைப்பர்

ஆராய்ந்து வழங்குவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top