Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கண்ணா ருலகிற் கரனக் கரனென்றே
யெணணாம் புருட ரிவரிருவர் – பண்ணாரும்
பூதவுயி ரெல்லாங் கரனாம் பொருவில்சீர்
மீதவுயி ரக்கரனாம் வேறு.        15.16

கண் ஆா உலகில்

விரிவான சாஸ்திரங்களில்

எண்ணாம் புருடர்

பிரசித்தமாயுள்ள புருஷர்கள்

கரன் அக்கரன் என்றே இவர் இருவர்

(அழியும் இயல்வுடைய அசேதனமான உடலோடு கூடியிருக்கையால்) க்ஷரபுருஷன் எனப்படும் பத்தஜீவனும் அழியும் இயல்வில்லாமையால் அக்ஷரன்' எனப்படும் முக்த ஜீவனுமாகிற இருவகைப் பட்டவரே

பண் ஆரும் பூத உயிர் எல்லாம் கரன்ஆம்

வேதத்தில் காணப்படும் பத்த ஜீவர்கள் அனைவரும் க்ஷரன் எனப்படுகின்றனர்

வேறு

இவனிலும் வேறுபட்டு

பொரு இல் சீர் மீத உயிர் அக்கரன் ஆம்

ஒப்பற்ற ஞானத்தை உடைய அசித்தினின்றும் நீங்கிய முக்த ஜீவர்கள் அனைவரும் அக்ஷரன் எனப்படுகின்றனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top