Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எல்லா ரிதயத் திருப்பேனா னென்னாலே
நல்லார் நினைவறிவு நாட்டமாஞ் – சொல்லார்ந்த
வேதங்கள் யாவைக்கும் வேத்தியனான் மேவுபயன்
மீதந் ததுவறிவேன் மிக்கு.        15.15

நான்

நான்

எல்லார் இதயத்து இருப்பேன்

எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் (ஆத்மாவாக) இருக்கிறேன்

நல்லார் நினைவு

அறிவுடையவர்களின் நினைவும்

அறிவு

வஸ்து நிர்ணயமும்

நாட்டம்

ஊக்கமும்

என்னாலே ஆம்

என்னிடமிருந்தே உண்டாகின்றன

சொல் ஆர்ந்த வேதங்கள் யாவைக்கும்

பல தேவதைகளைச் சொல்லும் வாக்கியங்கள் நிறைந்த வேதங்கள் அனைத்துக்கும்

வேத்தியன் நான்

பொருளாயிருப்பவன் நான்

அது மேவு பயன் மீதந்து

வேதவிதிகளின் பயன்களை அளித்து

அது மிக்கு அறிவேன்

அந்த வேதங்களை மிகவும் அறிபவனாகவும் இருப்பவன் நானே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top