Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பாங்காக நாதாவுன் பண்பாருங் கீர்த்தியா
லோங்கா ருகப்புற் றுலகுநல – மீங்கார்ந்த
வல்லரக்க ரஞ்சி மறைந்தார் திசையெய்தித்
தொல்லமரர் தாம்பணிந்தார் தொக்கு.   11.37

நாதா! பாங்காக

தலைவனே! மிகப் பொருத்தமாக

உன் பண்பு ஆரும் கீர்த்தியால்

உன்னுடைய கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் புகழைக்கண்டு

உலகு

தேவர் கந்தர்வர் முதலான உலகம்

ஈங்கு

இப்போர்க்களத்தில்

ஓங்கு ஆர் உகப்புற்று

ஓங்கிய நிறைந்த ஆனந்தத்தையடைந்து (போரைக் காணவந்திருக்கும்)

நலம் ஆர்ந்த(து)

உன்னிடம் ஈடுபாடு நிறையப்பெற்றது

வல் அரக்கர்

வலிமைமிக்க அரக்கர்கள்

அஞ்சி

உன்னைக் கண்டு பயந்து

திசை எய்தி மறைந்தார்

எல்லா திக்குகளிலும் ஓடி மறைந்தார்கள்

தொல் அமரர் தாம்

பழைமையானவர்களான ஸித்தர்கள் முதலான தேவ கணங்கள்

தொக்கு பணிந்தார்

ஒன்று சேர்ந்து வணங்கினார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top