Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கேசவன்ற னிவ்வசனங் கேட்ட கிரீடிதா
னேசமுடன் கைதொழுது நின்றிறைஞ்சி – மாசறுசீர்க்
கண்ணனைப்பின் னும்பகர்ந்தான கற்கதமாங் கண்டத்தா
லுண்ணடுக்க மெய்திவணக் குற்று.   11.36

கேசவன் தன் இவ்வசனம் கேட்ட கிரீடிதான்

கேஶவனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அர்ஜுனன்

நேசமுடன் (கண்ணனை) கைதொழுது நின்று இறைஞ்சி

அன்புடன் கண்ணனைக் குறித்துக் கைகூப்பி நின்று துதித்து

உள் நடுக்கம் எய்தி

நெஞ்சம் நடுங்கப்பெற்றவனாய்

மாசறு சீர் கண்ணனை

குற்றமற்ற குணங்களையுடைய கண்ணனை

பின்னும் வணக்குற்று

மறுபடியும் வணங்கி

கற்கதமாம் கண்டத்தால் பகர்ந்தான்

தழுதழுத்த குரலினால் கூறினான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top