Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஒல்லை யவன்றருமத் துற்ற வொருவனா 
மல்லைவினைச் சாந்திதனை மன்னுமே – யெல்லையில்சீா்க்
கௌந்தேயா வாங்கிதனைக் கட்டறுநீ யென்பத்தன்
போந்தே நசியான் புறத்து.       9.31

அவன்

என் விஷயமான ஸ்வயம் ப்ரயோஜன பக்தியைச் செய்பவன் (துராசாரமுடையவனாயினும்)

ஒல்லை

விரைவிலேயே

தருமத்து உற்ற ஒருவனாம்

(தடைநீங்கப் பெற்ற) பக்தியோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சையுடையவனாகிறான்

அல்லைவினை சாந்திதனை மன்னுமே

துராசார நிவருத்தியை நிலையாக அடைவான்

எல்லையில்சீர் கௌந்தேயா!

கணக்கற்ற குணங்களையுடைய குந்தீ புத்ரனே

என் பத்தன

என்னுடைய பக்தன்

புறத்துப்போந்தே

ஸதாசாரத்திற்குப் புறம்பாக நடப்பவனாயினும்

நசியான்

அழிந்துவிடமாட்டான்

ஆங்கு இதனை

என்னும் இந்த அர்த்தத்தை

நீ கட்டறு

நீ ப்ரதிஜ்ஞை செய்வாயாக 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top