Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மிகவுந் துராசார மேவிலும்வே றுன்னாத் 
தகவின்றி யென்றன்னைச் சார்வா- னிகழ்வின்றி
வாலறிவ னென்றே மதிக்கப் படுமவன்றான்
மேலறிவின் றன்மையான் மிக்கு.       9.30

மிகவும் துராசாரம் மேவிலும்

மிகவும் தாழ்ந்த ஒழுக்கத்தை உடையவனாயிருந்தாலும் 

வேறு உன்னாத தகவு ஒன்றி

வேறொரு பயனை விரும்பாத தன்மையோடு கூடி

என்றன்னை

என்னை

சார்வான

பக்திசெய்து அடைபவன்

இகழ்வு இன்றி

(தாழந்த ஒழுக்கத்தினால் ஏற்படக்கூடிய) இகழ்ச்சிக்கு இலக்காகாமல்

வாலறிவன் என்றே மதிக்கப்படும்

சிறந்த ஜ்ஞானி என்றே கொண்டாடப்படுவான் (ஏனெனில்)

அவன்றான்

அவன்தான்

மிக்கு

மிகவும்

அறிவின் மேல் தன்மையான

அறிவினால் உண்டாகும் உறுதிப்பாட்டை உடையவனன்றோ 

Scroll to Top