Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்னியலு மிச்சை முனிவான் முயன்றெழுந்து
பின்னிருமை கொண்ட பெருந்துயரா-லிந்நிலத்துப்
பூதங்க ளெல்லாம் புணர்பொழுதே யெய்துமே
யேதங்க ளாமோக மிங்கு.          7.27

முன் இயலும் இச்சை முனிவால் முயன்று எழுந்து

முதல் முயற்சியில் ஏற்பட்ட (சில ப்ராக்ருத விஷயங் களைப் பற்றிய ) விருப்பத்தாலும், (மற்றும் சில ப்ராக்ருத விஷயங்களைப் பற்றிய) வெறுப்பாலும் மிகுதியாக உண் டாகி

பின் இருமை கொண்ட பெரும் துயரால்

மேலும் மேலும் ஸுகம் து:க்கம் முதலான இரட்டைகளாகப் பெருகிப் பெரும்துன்பத்தை விளைக்கும் சுயநல உணர்ச்சி களாலே

இந்நிலத்து பூதங்கள் எல்லாம்

இவ்வுலகிலுள்ள ஸம்ஸாரி ஜீவர்களெல்லாம்

இங்கு புணர் பொழுதே

இவ்வுலகில் பிறக்கும் காலத்திலேயே,

ஏதங்களாம் மோகம் எய்தும்

பெரும் துன்பத்தை விளைக்கும் மயக்கத்தை அடைகின்றனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top