Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புண்ணியர்க ளெய்துபெரும் போகத் தினிதமர்ந்தே 
நண்ணியதிற் பல்லூழி நாளிருந்து – திண்ணியசீர்
செல்வநலந் தூயார் சிறந்தமனை யிற்பிறக்கு(ம்)
நல்வினையோ கஞ்சிதைந்தா னன்கு      6.37

நல்வினை யோகம் சிதைந்தான்

மிகச் சிறந்த நல்ல காரியமான யோகத்தைத் தொடங்கி அதிலிருந்து நழுவியவன்

புண்ணியர்கள் எய்து பெரும் போகத்து நண்ணி

அதிகமான புண்ணியர் செய்தவர்கள் அடையும் நல்ல உலகங்களில் இன்பங்களை அடைந்து

அதில் இனிது அமர்ந்தே பல்லூழி நாள் இருந்து

அவற்றில் (திருப்தி ஏற்படும் வரையில்) ஸுகமாக வாழ்ந்துகொண்டு நீண்டகாலம் இருந்துவிட்டு

திண்ணிய சீர் செல்வம் நலம் தூயார்

உறுதிபெற்ற நற்குணச் செல்வமும் தூய்மையும் உடையவர்களுடைய

சிறந்த மனையில்

சிறந்த வீட்டில்

நன்கு பிறக்கும்

(யோகத்தை தானும் தொடரத்தக்க) நல்ல சூழ்நிலையில் பிறப்பான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top