Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்னிசையா நெஞ்சுதன்னாற்சார்வரிதாம்யோகமென்
றென்னிசைவ தாகு மிதுபின்னை – முன்னிசையு 
நெஞ்சான் முயனறவனா னேரே யுபாயத்தா
லெஞ்சா தடையலா மிங்கு.       6.32

தன் இசையா நெஞ்சு தன்னால்

தனக்கு வப்படாத மனத்தால்

யோகம் சார்வரிதாம்

(ஸமதர்ஸநரூப) யோகம் அடைய இயலாதது

என்று

என்று

என் இசைவு அது ஆகும்

என் உறுதியான முடிவாகும் 

பினனை இது

ஆயினும் இதே யோகத்தை

உபாயத்தால்

(முற்கூறிய) கர்மயோகமாகிற உபாயத்தால்

முன் இசையும் நெஞ்சால்

தனக்கு முற்பட இசைந்துநிற்கும் மனத்தால்

முயன்றவனால்

முயற்சி செய்கின்ற யோகியால்

இங்கு

இப்பிறப்பிலேயே

எஞ்சாது

முழுவதும்

நேரே அடையலாம்

தடையற அடையலாம் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top