Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கு விசய னமலன் றனைக்கேட்டா 
னீங்குவிருப் புற்ற னியல்வற்றுப் – பாங்குமனந்
தக்கயோ கத்துச் சலித்தங் கதுசேரா
தெக்கூதியைத் தானடையு மிங்கு.     6.33

ஆங்கு

அந்தப் போர்க்களத்திலே

விசயன்

அர்ஜுனன்

அமலன்தனை கேட்டான்

குற்றமற்றவனான கண்ணனைப் ( பின் வருமாறு ) கேட்டான்

கண்ணா!

கண்ணனே!

ஈங்கு

இந்த யோக விஷயத்தில்

விருப்பு உற்றான்

ஸ்ரத்தையோடு கூடி அதைத் தொடங்கியவன்

இயல்வு அற்று

அப்யாஸம் இல்லாமையாலே

பாங்கு மனம் தக்க யோகத்து சலித்து

பாங்காயிருக்கும் நெஞ்சாலேயே தொடரத்தக்க யோகத்தினின்றும் நழுவப்பெற்று

அங்கு அது சேராது

அப்பிறப்பில அந்த யோகம் கைவரப்பெறாமல்

இங்கு

மறுமையில்

எக்கதியைத்தான்

(போக மோக்ஷ நரகங்களில் ) எந்த கதியைத்தான்

அடைவான்

பெறு வான்?

முன் பயன் சேர் கன்மம் முழுது ஒழிந்து

பூர்வ பாகத்தில் சொன்ன சுவர்க்கம் முதலான பயன்களில் பற்றோடு கூடிய கர்மங்களிலிருந்து முழுதும் நீங்கியவனாய்

மேல் பிரமம் தன் பயனாம் நல் வழியில் சாராதே

உபனிஷத்தில் சொன்ன ப்ரஹ்மத்தைப் பயனாகக் கொண்ட நல்ல உபாயமாகிற யோகமும் கைவரப்பெறாதவனாய்

பின்பு

மறுமையில்

அவன் தான்

அந்த மனிதன்

அவ்விரணடும் தான் நழுவி தஞ்சமிலாது

போகமோக்ஷகதிகள் இரண்டினின்றும் நழுவப்பெற்றுப் புகலற்றவனாய்

சின்னம் ஆம் மஞ்சு எனவே

சிதறிப்போகும் மேகம்போலவே

மாயுமோ

அழிந்துவிடுவனோ?

(அல்லது அழியாமலிருப்பானா?) மிக்க மயக்கு இதனை

இந்தப் பெரிய ஐயத்தை

மீண்டு ஒன்று ஒழியாமல்

மறுபடியும் ஒருசிறிதும் தலையெடுக்காதபடி

தக்க பரிசு

நல்ல முறையில்

அறுக்கத்தக்கவன நீ

போக் கடிக்கத் தகுதியுடையவன் நீயே

மிக்கோரில்

அறிவில் சிறந்தவர்களில்

இது ஒழிப்பார்

இந்த ஐயத்தைப் போக்ககூடியவர்கள்

உன்னை ஒழிய பெயர்ந்து பின்னை எவர் உண்டு

உன்னைவிட்டால் வேறு எவர் இருக்கின்றனர்?" 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top