Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புந்திக்கு மேற்காமம் புந்தித்துப் புந்தியாற்
சந்தித் தறத்துமனஞ் சார்த்திநீ – வந்தியலுஞ்
சேமமிக வீழ்த்துந் தீங்கியற்றும் வன்பகையாங்
காமமது நீத்தல் கடன்.     3.36

நீ

நீ

புந்திக்கு மேல் காமம் புந்தித்து

(முற்கூறியபடி) உறுதியான அறிவுக்கு மேற்பட்டதாகக் காமத்தை அறிந்து

புந்தியால்

உறுதியான அறிவாலே

அறத்து மனம் சந்தித்து சார்த்தி

கர்மயோகத்திலே மனத்தைச் சேர்த்து ஈடுபடுத்தி

வந்து இயலும் சேமம் மிக வீழ்த்தும் தீங்கு இயற்றும் வன் பகையாம் காமம் அது

உன்னிடம் வந்து பொருந்தியிருப்பதாய், உனக்கு வரும் நன்மைகளை மிகவும் அழிப்பதாய், தீமைகளைச் செய்வதாய், வலிய எதிரியாயிருப்பதான அக்காமத்தை

நீத்தல் கடன்

அழிப்பது உன் கடமை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top