Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா (மூன்றாமத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

மெய்யமரும் புத்தி விடாதென்று நின்றிவணுஞ்
செய்யும் கருமச் சிறப்பதனை – வையத்து
வாய்ந்தபுகழ்க் கீதை வளர்மூன்றா மோத்துரைத்த
வேய்ந்த பொருண்முடிந்த திங்கு.     3.36A

இவணும்

இவ்வுலகத்திலும்

மெய் அமரும் புத்தி விடாது

(ஆத்மாவைப்பற்றிய உண்மையைப் பொருந்திநிற்கும் அறிவை விடாமல்

என்றும் நின்று

என்றும் நிலைநின்று

செய்யும் கருமச் சிறப்பு அதனை

(இச்சேதனன்) அனுஷ்டிக்கும் கர்மயோகத்தின் பெருமையை

வையத்து வாய்ந்த புகழ் கீதை

உலகில் விளங்கும் புகழையுடைய கீதையின்

வளர் மூன்றாம் ஓத்து உரைத்த

வளர்ந்து நிற்கும் மூன்றாம் அத்தியாயம் உபதேசிக்கும்

ஏய்ந்த பொருள்

பொருந்திய அர்த்தம்

இங்கு முடிந்தது

இத்துடன் நிறைவுபெற்றது

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் மூன்றாமத்தியாயம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top