Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உற்றபொரு டோறு முகப்பு வெறுப்பவைதாம்
பெற்ற நிலையினவாம் பேசுங்கான் – மற்றவற்றை
யாங்கணைவா னல்ல னவையிவனுக் கெவ்வாறுந்
தீங்கமைக்குஞ் சேரச் செறிந்து.     3.27

உற்ற பொருள் தோறும்

( கர்மஜ்ஞாநேந்திரியங்கள் ) சென்றடையும் விஷயங்கள் அனைத்திலும்

உகப்பு வெறுப்பு அவை தாம்

ராகமும் துவேஷமும்

பெற்ற நிலையினவாம்

நிலைபெற்றிருக்கின்றன

பேசுங்கால்

உண்மையைச் சொல்லப் புகில்

ஆங்கு

ஞானயோகத்தை அனுஷ்டித்து

மற்றவற்றை

அந்த ராகத்வேஷங்களை

அணைவானல்லன்

உண்டாக்கிக் கொள்ளக்கூடாது

சேர செறிந்து

இவனோடு மிக நெருங்கிநின்று

அவை

அந்த ராகத்வேஷங்கள்

இவனுக்கு

இந்த ஞானயோக நிஷ்டனுக்கு

எவ்வாறும் தீங்கு அமைக்கும்

எவ்வகையிலும் தீமையே செய்யும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top