Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கருமபயன் காமித்தார் காமத்தா லிங்கே 
யொருமையுடன் றேவருட னொன்றி – யருமையினாற்
றாங்கியிறைஞ் சாநிற்பர் தாழா துலகுதனி
லாங்கருமத் தானபய னார்ந்து.      4.12

இங்கே

இவ்வுலகில்

கருமபயன் காமித்தார்

கர்மங்களின் பயனை விரும்புகிறவர்கள்

காமத்தால்

அவ்விருப்பத்தால்

தேவருடன்

இந்திரன் முதலான தேவர்களிடத்தில்

ஒருமையுடன் ஒன்றி

ஒரே மனத்தினராய் ஈடுபட்டு

அருமையினால் தாங்கி

(அவர்களையே) கிடைத்தற்கரியவர்களாக நினைத்துப் போற்றி

உலகுதனில்

இவ்வுலகில்

ஆம் கருமத்து ஆன பயன் ஆர்ந்து

செய்யப்படும் கர்மங்களால் ஏற்படும் (தாழ்ந்த) பலன்களிலேயே திருப்திபெற்று

இறைஞ்சா நிற்பர்

(முற்கூறிய தேவதைகளையே) ஆராதித்து நிற்கின்றனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top