Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னையெவ ரெவ்வா றடைந்தியல்வர் யானவரை
யன்னவகை யான்மிகவு மன்புற்றே – பின்னடைந்து
காட்டுவன்மற் றாதலினா லென்னெறியைக் காதலினா
னாட்டெவரும் பின்செல்வர் நன்கு.    4.11

எவர்

எவர்கள்

என்னை

என்னை

எவ்வாறு

எவ்வண்ணம் ஸங்கல்பித்து

அடைந்து இயல்வர்

ஆஸ்ரயிப்பார்களோ

அன்னவகையால்

அவ்வண்ணமாகவே (என்னை ஆக்கிக்கொண்டு)

யான்

நான்

மிகவும் அன்புற்றே

மிகவும் அன்புகொண்டவனாய்

அவரை

அவர்களை

பின்

அவர்கள் ஸங்கல்பித்து ஆஸ்ரயித்த பின்பு

அடைந்து காட்டுவன்

அடைந்து (என் திருமேனி முதலானவற்றைக்) காட்டுவேன்

ஆதலினால்

இப்படி நான் காட்டுகிறபடியாலே

நாட்டு எவரும்

நாட்டிலுள்ள எல்லா மனிதரும்

என் நெறியை

என் தன்மைகளை

காதலினால்

அன்போடு

நன்கு பின் செல்வர்

எல்லாப்படியாலும் அனுபவிப்பார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top