Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நேயம் பயம்வெகுளி நீங்கியென் றன்மையரே 
யாய திறத்தா லடைந்தென்னைத் – தூய
வறிவாந் தவத்தா லனேகரென் றன்மை 
செறிவார்கள் பூதராய்ச் சேர்ந்து.     4.10

தூய அறிவாம் தவத்தால்

(முற்கூறிய) அவதார ரஹஸ்ய ஜ்ஞானமாகிற தவத்தினாலே

பூதராய் சேர்ந்து

(உபாஸந விரோதி)பாபம் கழியப்பெற்றவர்களாய் என்னிடம் ஈடுபட்டு

அநேகர்

பலர்

என்னை அடைந்து

என்னை தியானித்து

நேயம் பயம் வெகுளி நீங்கி

(மற்ற விஷயங்களில்) விருப்பமும் (அவ்விஷயங்களை அடையத்தடை ஏற்படுமோ என்னும்) பயமும் (தடை செய்வாரிடம்) கோபமும் அற்றவர்களாய்

என் தன்மையரே ஆய திறத்தால்

என்னிடமே நெஞ்சு செலுத்தி ஸமாதி நிலையை அடைந்தமையால்

என் தன்மை செறிவார்கள்

(மோக்ஷத்தில்) என்னைப்போன்ற தன்மையை உடையவராவார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top