Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இக்கருமங் காயமெனச் சேர் பிரமத் தாலா
மக்கருமஞ் சீவனா லாங்கதுவாஞ் – சிக்கெனவே
யெங்கு நிகழ்வுடலா மிப்பிரமம் வேள்வியிலே
தங்கு நிலையமருந் தான்.      3.13

இக்கருமம்

கருமமாகிற இது

காயம் என சேர் பிரமத்தால் ஆம்

உடம்பாகிற நிலையையடைந்த மூலபரக்ருதியால் உண்டாவது

அக்கருமம் அது

அக்கருமத்துக்குக் காரணமான அந்த உடம்பு

ஆங்கு சீவனால் ஆம்

அந்ந பாநாதிகளால் திருப்தியடையும் ஜீவாத்மாவால் ஏற்படுவது

எங்கும் நிகழ்வு உடலாம் இப்பிரமம் தான்

எல்லா அதிகாரிகளிடமும் இருக்கும் உடலாகிற நிலையை அடைந்த இந்த மூலப்ரக்ருதியானது

சிக்கெனவே

நிலையாக

வேள்வியிலே தங்கும் நிலை அமரும்

(இவ்வாறாக) யஜ்ஞத்தை மூலமாகக் கொண்டதாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top