Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

துன்பத்தி லென்றுந் துளங்கா மனத்தனா
யின்பத் திடையாசை யில்லவனாய்ப் – புன்பற்றி
லன்பு பயம்வெகுளி யற்றவனே யாங்குணர்வின்
வன்பு பெறுமுனியா மற்று.         2.52

மற்று

மேலும்

துன்பத்தில்

துன்பம் தருமவை ஏற்பட்டால்

என்றும் துளங்கா மனத்தனாய்

என்றுமே துன்புறாத மனத்தையுடையவனாய்

இன்பத்திடை

இன்பம் தருமவற்றில்

ஆசை இல்லவனாய்

ஆசை இல்லாதவனாய்

புன்பற்றில்

தாழ்ந்த விஷயங்களில் பற்றினால் வரும்

அன்பு பயம் வெகுளி அற்றவனே

ராகம்,பயம்,குரோதம் ஆகியவை இல்லாதவனே

ஆங்கு

ஜ்ஞானநிஷ்டர்களுக்குள்

உணர்வின் வன்பு பெறும் முனியாம்

அறிவில் உறுதிபெற்ற முனியெனப் படுகிறான் (இவனும் ஸ்தித2ப்ரஜ்ஞனே யென்றபடி.)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top