Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கவனுக் கண்ண லதுவுரைத்தா னாங்குயிரின்
பாங்கதனாற் றானே படிந்தமைந்து – தாங்கரிய
வெண்ணரிய காமங்க ளெல்லாந் துறக்குமவன்
றிண்ணறிவ னாகுமெனச் செப்பு.        2.51

ஆங்கு

அப்போது

அவனுக்கு

அவ்வர்ஜுனனுக்கு

அண்ணல்

ஸ்வாமியான கண்ணன்

அது உரைத்தான்

அக்கேள்விக்கு பதிலை உரைத்தான்

ஆங்கு

ஜ்ஞாநயோக நிஷ்டர்களில்

உயிரின்பாங்கு அதனால்

ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தால்

தானே படிந்து அமைந்து

தன் ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டு நின்று

தாங்கரிய

(மனத்தினால்) தாங்கமுடியாதவையாய்

எண்ணரிய

எண்ணமுடியாதவை

காமங்கள் எல்லாம்

எல்லா விருப்பங்களையும்

துறக்குமவன்

கைவிடுகின்றவன்

திண்ணறிவனாகும் என

ஸ்தி2தப்ரஜ்ஞன் (நிலைநின்ற அறிவையுடையவன்) என்று

செப்பு

கூறுவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top