Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

31. யாவரும் தினப்படியாக தேவதாராதனம் செய்து நிவேதனம் செய்து தச்சேஷத்தைக் கொண்டே தேஹதாரணம் பண்ணவேணுமென்பது ஸகல சாஸ்த்ரங்களின் கொள்கை. இவ்வர்த்தம் மூன்றாமத்யாயத்தில் பலச்லோகங்களால் தெரிவிக்கப்படுகின்றது. 10, 11, 12 ச்லோகங்கள் இவற்றுள் மிக முக்கியமானவை. (10) “ஸஹ யஜ்ஞை: ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:, அநேந ப்ரஸவிஷயத்வம் ஏஷ வோஸ்த்விஷ்டகாமதுக்." இந்த ச்லோகத்தில் “ஸஹயஜ்ஞ: ப்ரஜா:" என்று சங்கரபாஷ்ய பாடம். அப்பாடத்தில் 'ஸஹயஜ்ஞா;' என்பது ஏகபதம். 'யஜ்ஞஸஹிதா: ப்ரஜா;' என்று சங்கரபாஷ்யம். “ஸ்ஹ்யஜ்ஞா இதி சங்கரயாதவ ப்ரகாசீயபாடஸ்து அப்ரஸித்தேரநாத்ருத:" என்பது தாத்பர்ய சந்த்ரிகாஸூக்தி. அன்றியும் (ப்ரஜாபதி:) என்பதற்கு நான்முகனே பொருளாக சங்கரபாஷ்யம் காட்டுகிறது. ஸர்வேச்வரனே நிருபாதிக ப்ரஜாபதியாகையால் ஸ்ரீமந்நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தார்த்தமென்று பகவத் ராமாநுஜ பாஷ்யமுள்ளது. இதில் ஸ்வாரஸ்யமேதென்னில்; இங்குச் சொல்லப்படுகிற அர்த்தம் நான்முகனுட்பட ஸம்ஸாரவசவர்த்திகளான ஸகல ப்ராணிகளையும் நோக்கியது. அவர்களையும் நோக்கியே இக்கட்டளை இடப்படுகிறபடியால் நான்முகனை ஆஜ்ஞாபக கோடியில் சேர்ப்பது உசிதமன்று; ஆஜ்ஞாப்ய கோடியில் சேர்ப்பதுதான் உசிதம் என்று ஸ்வாமியின் திருவுள்ளம். நான்முகனையும் ப்ரஜைகளின் கோடியிலே சேர்த்துப் பொருள் செய்வதுதான் பொருத்தமானது. ப்ரளயத்திற்கடுத்தபடியாக ஸ்ருஷ்டி காலத்தில் பகவான் யஜ்ஞங்களோடு கூடவே ப்ரஜைகளைப் படைத்து இங்ஙனே சொன்னான் இந்த யஜ்ஞத்தைக் கொண்டே நீங்கள் அபிவிருத்தியடையக் கடவீர்கள்: இந்த யஜ்ஞமானது உங்களுக்குப் பரம புருஷார்த்தமான மோக்ஷமென்கிற காமத்தையும் அதற்குச் சார்பான மற்ற காமங்களையும் பூர்த்திசெய்யக் கடவது. என்று ச்லோகத்திற்குப்பொருள். ‘யஜ-தேவபூஜாயாம்' என்று தாதுவாகையாலே பகவதாராதனந்தான் யஜ்ஞ மெனப்படுகிறது. பகவதாராதனம் செய்தே அவரவர்கள் அபிவிருந்தியடைய முடியுமென்றும், பகவதாராதனத்தினால் அபீஷ்ட காமங்கள் நிறைவேறுமென்றும் சொல்லிற்றாயிற்று. இது தன்னை அடுத்த ச்லோகம் விவரிக்கிறது; (11) "தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ: பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரம் அவாப்ஸ்யத." பகவதாராதநமான இந்த யஜ்ஞத்தினாலே எனக்கு சரீர பூதர்களான தேவர்களை ஆராதியுங்கள்; அப்படி ஆராதிக்கப்பட்ட அந்த தேவர்கள் மேன் மேலும் தங்களுடைய ஆராதனைக்கு வேண்டிய பொருள்களினால் உங்களைப் போஷிக்கக் கடவர்கள். இப்படி பரஸ்பரம் த்ருப்தி பெறுவித்துக் கொண்டு சிறந்த ச்ரேயஸ்ஸான மோக்ஷத்தை அடைவீர்கள்- என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. இதில் பூர்வார்த்தம் இப்படியிருக்கலாமோ? வேறுவிதமாக இருக்கவேண்டாவா? நீங்கள் என்னை ஆராதியுங்கள்; நான் உங்களை த்ருப்தி செய்விக்கிறேன், என்று சொல்லவேண்டியிருக்க, தன்னிற்காட்டில் நீசர்களான தேவதைகளை ஆராதிக்கும்படி நியமிப்பதும், அந்த தேவதைகள் உங்களுக்குப்பலன் கொடுப்பர்களென்று சொல்லுவதும் எதற்காக? என்று சங்கை தோன்றும். கேண்மின். விஷயங்களைப் படிப்படியாகத் தானே சொல்ல வேண்டியிருக்கிறது. மேலே ஒன்பதாமத்யாயத்தில் (22) "அநந்யாச் சிந்தயந்தோ மாம் யே ஐநா: பர்யு பாஸதே" என்கிற ச்லோகத்தினால் தன்னையே உபாஸிக்கும்படி சொல்லி, அதற் கடுத்த (23) ச்லோகத்தில் "யே த்வந்யதேவதாபக்தா யஐந்தே ச்ரத்தயாந்விதா:, தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்.” என்று இதரதேவதைகளை பஜிப்பவர்களும் ஒருவாறு தன்னையே பஜித்து ஆராதனை செய்கிறார்களென்று சொல்லி, அதற்கடுத்த (24) ச்லோகத்தில்—"அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபு ரேவச" என்று எந்த தேவதையை நோக்கி எந்த ஆராதனம் செய்தாலும் அதெல்லாம் தன்னையே சேருகிறதென்றும் அதற்குப் பலனும் தானே (ஸத்வாரகமாகக்) கொடுப்பதாகவும் சொல்லி யிருப்பதால் "தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:" என்றவிதில் யாதொரு குறையுமில்லை யென்றுணர்க.

32. இனி ப்ரக்ருத விஷயத்திற் செல்லுவோம். (3-12) "இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:, தைர்தத்தாந் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:." இந்த ச்லோகத்தின் கருத்தாவது—உங்களுடைய யஜ்ஞங்களாலே ஆராதிக்கப்பட்டவர்களும் என்னுடைய சரீர பூதர்களுமான தேவர்கள் உங்களுக்கு அபேக்ஷிதங்களான போகங்களைக் கொடுப்பர்கள், ஆராதநோபகரணங்களாக உங்களிடமுள்ள பொருள்களெல்லாம் அந்த தேவர்களாலேயே கொடுக்கப் பட்டவைகளாதலால் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் புஜிப்பவன் கள்வனேயாவன், நரகமே யவனுக்குப் பலிக்கும்-என்றபடி. இதில் [தைர் தத்தாந்] என்றது குறிக்கொள்ளத்தக்கது. தைத்திரீய ஸம்ஹிதையில் மூன்றவது காண்டத்தில் இரண்டாவது ப்ரச்நத்தில் "இத: ப்ரதாநம் தேவா உபஜீவந்தி அமுத: ப்ரதாநம் மநுஷ்யா:” என்று ஓதப்பட்டுள்ளது. இதன் கருத்தாவது தேவதைகளுக்கு ஆக வேண்டிய உணவு இங்கிருந்து செல்லுகிறது; மனிதர்களான நமக்கு ஆகவேண்டிய உணவு அங்கிருந்து வருகிறது என்பதாம். *முந்திவானம் மழைபொழிய மூவா வுருவின் மறையாளர், அந்திமூன்று மனலோம்புமணியார்வீதி யழுந்தூரே* என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே இங்கிருக்கும் நாம் யஜ்ஞயாகங்களைச் செய்து தேவர்களை ஸந்த்ருப்தி பண்ணிவைத்தால் திருப்தர்களான அவர்கள் அங்கிருந்து மழையை யனுப்பி நம்மை ஜீவிக்கச் செய்கிறார்களென்கை. ஆகவே நாம் தேவதாராதனம் பண்ணாமல் வெறுமனே வயிற்றை வளர்த்தால் ஜீவிப்பதும் அரிதாம் என்றதாயிற்று, பலபேர்கள் தேவதாஸத்பாவத்தையே அங்கீகரியாதவர்களாயும் அவர்களுக்கு ஆராதனம் செய்யாதவர்களாயும் உண்டுடுத்துத் திரியவில்லையா? அவர்கள் சுகமாக ஜீவிக்கவில்லையா? என்கிற ஆக்ஷேபத்தை இங்குச் சிலர் செய்யக்கூடும். அவர்கள் “அதர்மேணைததே தாவத் ததோ பத்ராணி பச்யதி, சதை ராவர்த்தமாநஸ்து கர்துர்மூலாநி க்ருத்ததி." என்கிற மநுமஹர்ஷி வசனத்தை நோக்கித் தெளியக்கடவர்கள். அதர்மம் செய்பவர்கள் மேன்மேலும் க்ஷேமங்களை யடைவதாக உலகில் நாம் காண நேர்ந்தாலும், அதர்மம் உடனே ஹாநியை விளைத்திடாமல் நாளடைவில் மூலஹாநியை விளைத்திடுமென்று கொள்ளவேணும். இதை மநுமஹர்ஷி பல ச்லோகங்களால் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

33. இனி (321) "யத் யதாசரதி ச்ரேஷ்ட: தந்ததேவேதரோ ஜந:, ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்த்ததே”. என்னும் ச்லோகம் சிஷ்டாசாரத்தின் சிறப்பைத் தெரிவிப்பது. ஸம்ஸ்க்ருதஜ்ஞர்களுக்கு அநாயாஸமாகப் பொருள் படக்கூடிய ச்லோகமிது. இதன் உத்தாார்த்தத்திற்கு பாஷ்யமிட்ட சங்கராசார்ய ஸ்வாமிகள் "ஸ:- ச்ரேஷ்ட:, யத் ப்ரமாணம் குருதே-லௌகிகம் வைதிகம் வா, லோக: தத் அநுவர்த்ததே-ததேவ ப்ரமாணீகரோதீ யர்த்த:” என்றுரைத்தார். ச்சேஷ்டரா யிருப்பார் யாதொன்றை ப்ரமாணமாகக் கொள்ளுகிறார்களோ, அது தன்னையே லோகமும் ப்ரமாணமாகக் கொள்ளுகிறது என்பதாகப் பொருள் காட் டப்பட்டதாயிற்று. மத்வாசார்யரான ஆனந்த தீர்த்த ஸ்வாமிகளும் இவ்வண்ண மாகவே பொருளுரைத்தார். "ஸ: யத்வாக்யாதிகம் ப்ரமாணீகுருதே-யதுக்தப்ரகாரேண திஷ்டதீத்யர்த்த:" என்பது அவருடைய பாஷ்ய பங்க்தி. ஆக இவற்றால் “யத்ப்ரமாணம்” என்றவிடத்தில் பதச்சேதம் இவர்களுக்கு விவக்ஷிதம் என்று தேறிற்று. யத் என்பது தனிப்பதமென்று முடிந்தது. இனி நம் ஸ்வாமியின் பாஷ்ய ப்ரக்ரியையைப் பார்ப்போம். அவர் இங்கு இரண்டு பதங்களாகத் திருவுள்ளம் பற்றாமல் (யத்ப்ரமாணம்) என்று பஹுவ்ரீஹி ஸமாஸங் கொண்ட ஒரே பதமாகத் திருவுள்ளம்பற்றி பாஷ்யமிட்டருளியுள்ளார். பூர்வார்த்தத்தில் "ச்ரேஷ்ட: யத்யத் ஆசரதி” என்றதற்கு-ச்ரேஷ்டராயிருப்பார் எந்தெந்த கருமத்தை யநுஷ்டிக்கிறாரோ என்பதாகப் பொருளாதலால் அந்த கர்மத்தைப் பற்றியே உத்தரார்த்தமும் சொல்லுகிற தென்று ஸ்வாமியின் திருவுள்ளம். சிஷ்டர்கள் தாங்களனுஷ்டிக்கிற கருமத்திற்கு எவ்வளவு அவதி வைத்துக் கொள்ளுகிறார்களோ அவ்வளவு அவதியையே பிறரும் வைத்துக்கொள்ளுகிறார்கள் என்றபடி. வேதாந்த தேசிகன் விவரித்துள்ளார். 'பெரியோர்கள் அனுஷ்டிக்கிற கருமத்தையே இதை தாத்பர்யசந்த்ரிகையில் பிறரும் அனுஷ்டிக்கிறார்கள், என்று இவ்வளவு மாத்திரமே சொன்னால் போதாது. அவர்கள் அக்கருமத்தை எந்த விதமாக அநுஷ்டிக்கிறார்களோ அந்த விதமாகவே பிறரும் அநுஷ்டிக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டியது இங்கு ஆவச்யகமாதலால் அதற்குச்சேர ஸ்வாமியின் பாஷ்யம் மிகப் பொருத்தமாக அவதரித்துள்ளது. பெரியார் எதை ப்ரமாணமாகக்கொள்ளுகிறாரோ அதையே பிறரும் ப்ரமாணமாகக் கொள்ளுகிறாரென்பது ப்ரக்ருதத்தில் அநபேக்ஷித மாதலால் இதர பாஷ்யகாரர்களை நம் ஸ்வாமி பின் செல்ல வில்லை. 'யத்ப்ரமாணம் குருதே' என்றதற்கு இங்ஙனே பொருள் கொண்டால் “லோகஸ் ததநுவர்த்ததே” என் ற மேல் வாக்யத்தில் தத் என்றது ஸ்வரஸமாகப் பொருள் தருமோவென்று ஒரு சங்கை தோன்றும். இதற்குத் தாத்பர்ய சந்த்ரிகையிலேயே தகுந்த பரிஹாரமுள்ளது, கண்டு கொள்க. இதர பாஷ்ய காரர்களுக்குத் தோன்றாத அர்த்தம் இங்கு நம் ஸ்வாமிக்குத் தோன்றினது எதனா லென்னில்; திருப்பாவை ஜீயரென்று ப்ரஸித்தி பெற்றிருந்ததனாலேயே என்னலாம். திருப்பாவையில் *மாலே மணிவண்ணா என்கிற பாசுரத்தில் “மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்றுள்ளது. இங்கு "மேலையார் செய்வனகள் கேட்டியேல்" என்னுமளவே போதுமாயிருக்க இடையில் “வேண்டுவன” என்று ப்ரயோகித்தது குறிக்கொள்ளத் தக்கது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top