Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

4. எத்தனை வியாக்கியானங்கள் அவதரித்திருந்தாலும் 'மதத்ரய பாஷ்யம்' என்று ப்ரஸித்தமாக வழங்கப்பட்டு வருகின்ற மூன்று பாஷ்யங்களே வைதிகவுலகில் அதிகமான ப்ரஸித்தியை யடைந்திருக்கின்றன. வட இந்தியாவில் வல்லபமதத் திற்கு அதிகப்ரசாரம் காண்பதனால் ஆங்கே வல்லபாசார்ய வியாக்கியானமும் சிறந்ததாகக் குலாவப்படும். நமது நாட்டில் சங்கராசார்யரியற்றிய அத்வைதபரமான பாஷ்யமும், ஸ்வாமி யெம்பெருமானாரியற்றியருளின விசிஷ்டாத்வைதபரமான பாஷ்யமும், ஸ்ரீமத் ஆனந்த தீர்த்த ரென்னும் மத்வாசார்யரியற்றிய த்வைத பரமான பாஷ்யமும் இவற்றுக்கு சிஷ்யகோடிகள் இயற்றிய டீகைகளும் ப்ரஸித்தி பெற்று விளங்குகின்றன. பகவத்ராமாநுஜர் அருளிச் செய்த பாஷ்யமும் அதற்கு வேதாந்த தேசிகனருளிய தாத்பர்யசந்த்ரிகை யென்னும் டீகையும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் மிகவுயர்ந்த ஸ்தானத்தை யலங்கரித்து வருகின்றன.

5. மதத்ரய பாஷ்யங்களென்று குலாவப்படுகின்ற மேலே குறித்த மூன்று பாஷ்யங்களும் ஸம்க்ஷேபமான முறையில் அவதரித்தவை யெனினும், மத்வாசார்ய பாஷ்யமானது மிகவும் ஸம்க்ஷிப்தமாகத் தோன்றியது. சங்கராசார்ய பாஷ்யமானது அதைவிட சிறிது விரிவாகத் தோன்றியது. பகவத் ராமாநுஜ பாஷ்யமானது ஆவச்யக விஷயங்களைச் சிறிதும் விடாமலும் அநாவச்யாக விஷயங்களை அடி யோடு ஏற்றுக்கொள்ளாமலும் பரம போக்யமான பத்ததியில் அவதரித்துள்ளது. உலகில் அவரவர்கள் தம்தம் ஸம்பிரதாய நூல்களைப் புகழப் பிறந்தவர்களாதலால் அதற்குச் சேர நாம் பகவத் ராமாநுஜ பாஷ்யத்தை ப்ரசம்ஸிப்பதாகச் சிலர் நினைக் கவுங்கூடும். வஸ்து ஸ்திதியில், எந்த மதத்தைச் சேர்த்தவரும் பகவத் ராமாநுஜ பாஷ்யத்தைக்கண்டு ஈடுபடுவதை நாம் காண்கிறோம். மூலத்திலுள்ள ஒரு பதத்திற்கும் அர்த்தம் செய்வதை விடாமலும் பொருத்தமான அந்வயக்ரமங்களையும் அர்த்தங்களையும் காட்டியும் அருளிச்செய்யப்பட்ட பாஷ்யம் இஃதொன்றே யென்று நாம் கூசாமல் கூறலாம். இது அபிமானத்தில் சொள்ளப்படுகிற வார்த்தை யென்று பிறர் நினைத்தாலும் நினைத்திடுக. விவேகிகளான யாவருடைய மனமும் ஒருங்கே இசையக்கூடிய வார்த்தையே இது என்பது வஸ்துஸ்திதி.

6. ஒவ்வொரு க்ரந்தத்திற்கும் அவதாரிகையுண்டு. ஆனால் அந்த அவதாரிகையானது பெரும்பாலும் வியாக்கியானகாரர்களால் விவரிக்கப்படும். அது மூலக்ரந்தத்தில் இல்லாமலிருக்கும். திருவாய்மொழிக்கு முதல் ச்ரிய:பதியென்றும் இரண்டாம் ச்ரிய:பதியென்றும் மூன்றாம் ச்ரிய:பதியென்றும் அவதரித்துள்ள அவதாரிகைகள் வியாக்கியானகாரர்களினால் அமைக்கப்பட்டவையேயன்றி மூலமான திருவாய்மொழியில் அவதாரிகையாக ஓரக்ஷரமும் கிடையாது. கீதையில் அப்படி யன்றிக்கே முதலத்யாயம் முழுதும் அவதாரிகையாகவே தோன்றியுள்ளது. 'இந்த நூல் எதற்காக அவதரிக்கின்றது' என்பதை விசதமாக நிரூபிப்பதுதானே அவதாரிகை. அதனை நாம் பிறர் வாயினால் தெரிந்துகொள்ள வேண்டாமல் கீதையைக் கொண்டே நன்கு தெரிந்து கொள்ளுகிறோமாதலால் இதற்கு அவதாரிகையும் இதிலேயே பொருந்தியிருக்கிறதென்று சொல்லத்தட்டில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top