Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

யாவ னிவனை யிவன்கொல்வா னென்றறியும்
யாவனிவன கொல்லுண்பா னென்றறியும் – மேவு
மறிவிருவ ருஞ்சாரா ராங்கிவனுங் கொல்லா
னெறியவனுங் கொல்லுண்ணா னேர்ந்து.   2.19

யாவன்

எவனொருவன்

இவனை இவன் கொல்வான்

ஆத்மாவை மற்றொருவன் கொல்லுவான்

என்று அறியும்

என்று அறிகிறானே

யவன்

எவனொருவன்

இவன்

இவ் வாத்மாவானவன்

கொல்லுண்பான்

கொல்லப்படுவான்

என்று அறியும்

என்று அறிகிறானோ

இருவரும்

இவ்விருவரும்

மேவும் அறிவு சாரார்

பொருந்திய அறிவை உடையவரல்லர்

ஆங்கு

ஆத்மாவின் விஷயத்தில்

இவனும்

மற்றொருவனும்

கொல்லான்

(ஆத்மாவைக்) கொல்லமாட்டான்

நெறி அவனும்

நித்தியத்தன்மையை உடைய ஆத்மாவும்

நேர்ந்து கொல்லுண்ணான்

எந்நிலையிலும் கொல்லப்படமாட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top