Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மாயா தளவின்றி மன்னுஞ் சரீரிதனக்
கோயாது மாறு முடலமிவை – மீயாரு
மந்த முடையவெனு மாதலினாற் பார்த்தனே
யிந்த வமர்முயல்வா யின்று.   2.18

மாயாது

அழிவில்லாமல்

அளவின்றி

அறியப்படும் அசேதனத்திலும் வேறுபட்டதாய்

மன்னும்

தோற்றமு மில்லாமையாலே நிலைநிற்கும்

சரீரிதனக்கு

ஆத்மாவிற்கு

ஓயாது மாறும் உடலம் இவை

இடைவிடாமல் மாறிக்கொண்டுவரும் இந்த தேஹங்கள்

அந்தம் உடைய எனும் மீயாரும்

அழிவை உடையவை என்பர் அறிவுமிக்க எவரும்

பார்த்தனே!

அர்ஜுனா!

ஆதலினால்

இக்காரணத்தால்

இன்று

இன்று

இந்த அமர் முயல்வாய்

இந்த யுத்தத்திலே முயற்சி கொள்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top