Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கைந்நின்றுங் காண்டீவம் வீழுங் கனன்றுடறோன்
மெயநின்று தாங்கமிகமாட்டேன் – மைந்நின்ற 
நெஞ்சந் திகைக்கு நிமித்தங் களுந்தீதா
வஞ்சும் படியா மவை.     1.24

கை நின்றும் காண்டீவம் வீழும்

என் கையிலிருந்து காண்டீவம் என்னும் என் வில் நழுவும்;

உடல் தோல்

உடம்பிலுள்ள தோல்.

கனன்று

எரிந்து,

மெய் நின்று

தாங்க மிக மாட்டேன்

உடம்பை நிலைநிறுத்தித் தாங்க மிகவும் முடியாதவனாயிருக்கிறேன்;

மை நின்ற நெஞ்சம்

(தர்மாதர்மபயத்தால்) கறுத்து நிற்கும் நெஞ்சம்,

திகைக்கும்

கலங்கும்

நிமித்தங்களும் அவை

(நான்காணும்) அந்த சகுனங்களும்.

தீதா

தீயதாகவும்.

அஞ்சும்படி ஆம்

பயப்படும்படியாகவும் உள்ளன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top