Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னோக்கம் பெற்றங் கசித்துச் சராசரத்தை
முன்னோக்கி நின்று முயன்றுபெறு – மிந்நோக்கா
மேதுவினாற் கௌந்தேயா வெவ்வுலகுந் தன்கரும்
மீது வளா்தருமே மிக்கு.       9.10

கௌந்தேயா!

குந்தீபுத்திரனே

முன் நோக்கி நின்று

 முன்னதாகவே இதன் ஸத்தையை நோககி நின்று

முயன்று

இதை ஸ்ருஷ்டிப்பதில் முயன்று நிற்கும்

என் நோக்கம் பெற்று

எனனுடைய ஸங்கல்பத்தைப் பெற்று

அங்கு

ஸருஷ்டி காலததிலே 

அசித்து

அறிவற்றதான மூலப்ரக்ருதி

சராசரத்தை

அசைவனவும் அசையாதனவு மடங்கிய இவ்வுலகத்தை

பெறும்

ஸ்ருஷ்டிக்கும்

இந் நோக்காம ஏதுவினால்

எனனுடைய ஸங்கலபமாகிற இந்தக் காரணத்தினால்

எவ்வுலகும்

எல்லா ஜீவஸமூஹமும் 

தன் கருமம் மீது

தன் புண்ய பாப காமம் காரணமாக

மிக்கு வளாதருமே

ஆவதும் ஆளாவதும் அழிவதுமாயிருக்கும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top