Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அங்கிபகன் முற்பக்க மாங்கு வடவயனந் 
தங்கிமிசை யேகியே தாமணைவர் – சங்கையற
மன்னும் பிரமத்தை வாய்ந்ததனைத் தம்முணர்வா
லுன்னு மனத்தவர்க ளுற்று .            8.23

அங்கி

அக்நியாகிற அர்ச்சிஸ்ஸு

பகல்

அஹஸ்ஸு

முற்பக்கம்

ஸுக்லபக்ஷம்

ஆங்கு

அடுத்தபடியுள்ள

வடவயனம் மிசை

உத்தராயணம் ஆகியவற்றிலே

தங்கி ஏகியே

தங்கிச்சென்று

சங்கை அற

ஐயமில்லாமல்

மன்னும் பிரமத்தை

நிலைநின்ற ப்ரஹ்மத்தை

வாய்ந்து

ப்ராப்யமாகப் பெற்று

தாம் அணைவர்

தாம் அநுபவிக்கப் பெறுவர்

(யாரெனில்) அதனை

அந்த ப்ரஹ்மத்தை

தம் உணர்வால் உற்று

தம் அறிவாலே ப்ராப்யமாக எண்ணி

உன்னும் மனத்தவர்கள்

உபாஸிக்கும் நெஞ்சை உடையவர்களே (முற்கூறியவாறு அடைவர்) 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top