Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னை யடைந்ததற்பி னெஞ்சாத் துயர்விளைக்கு
மின்னை நிகர்பிறப்பு மேவலுறார் – அன்ன
பெருமனத்த ராய்ப்பிறங்கும் பேரின்ப மன்னுந்
திருமனத்த ரானார் சிறந்து.      8.14

அன்ன பெருமனத்தராய்

முற்கூறியபடி பெரியநெஞ்சையுடைய மஹாத்மாக்களாய்

சிறந்து பிறங்கும் பேரின்பம் மன்னும் திருமனத்தரானார்

மிகச்சிறந்து விளங்கும் பரமாத்மாநுபவத்தில் ஊன்றிய நன்னெஞ்சை உடையவர்கள்

என்னை அடைந்ததன்பின்

என்னைப் (பரமபதத்தில்) அடைந்தபின்

எஞ்சா துயர் விளைக்கும்

முடிவில்லாத துன்பத்தை உண்டாக்குவதாய்

மின்னை நிகர்

மின்னலைப்போல் நிலை நில்லாததான

பிறவி

தேஹத்தை

மேவல் உறார்

(மறுபடியும்) அடையமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top