Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அற்ப மதியான வவர்க்கங் கமைபலந்தா
னிற்பதில தாக நிகழுமே  கற்பமரர்
பின்சேர்ந்தா ரங்கவரைப் பெற்றா ரவரெனையே
யின்சேர்ந்தா ரும்பெறுவ ரிங்கு.     7.23

அற்பமதியான அவர்க்கு

புல்லறிவாளரான அவர்களுக்கு

அங்கு அமை

தேவர்களிடம் கிடைக்கும்

பலம் தான்

பயனானது

நிற்பதிலதாக நிகழுமே

நிலை நில்லாத தாகவே ஆகிறது( ஏனெனில் )

கற்ப அமரர்

கற்ப காலத்திற்குட்பட்ட வாழ்வையுடைய தேவர்களை

பின் சேர்ந்தார்

ஆராதிப்பவர்கள்

அங்கு

(நிலைநில்லாத ) அமரருலகில்

அவரை பெற்றார்

அவ்வமரரையே அடைவர்

இங்கு

இவ்வுலகில்

எனையே இன் சேர்ந்தாரும்

என்னிடமே இனிதாக ஈடுபட்டவர்களும்

(எனையே) பெறுவர்

என்னையே அடைவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top