Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்னிலாங் காமங்க டானெல்லா நெஞ்சால்விட் 
டன்ன புலனனைந்து மான்றடக்கி – மன்னுநிலைப்
புந்தியினின மெள்ளமனம் பூணடாங் குயிர்மன்னச்
சிந்தியான் வேறொன்றுஞ் சேர்ந்து.    6.22

தன்னில் ஆம் காமங்கள் தான் எல்லாம்

தன் மமகாரத்தால் ஏற்படும் எல்லா விரும்பத்தக்க விஷயங்களையும்

நெஞ்சால் விட்டு

( அடியோடு ) மனத்தால் கைவிட்டு

அன்ன புலன் ஐந்தும

விஷயங்களில் பட்டிமேய்வதை இயல்வாகக்கொண்ட ஐந்து இந்திரியங்களையும்

ஆன்று அடக்கி

( எல்லா விஷயங்களினின்றும் ) நன்கு அடக்கி

மெள்ள

சிறிது சிறிதாக

மன்னு நிலைப் புந்தியினின்

சலனமில்லாத அறிவினாலே

உயிர் மன்ன மனம் பூண்டு

ஆத்மாவிலேயே இருப்பதாக மனத்தைச்செய்து

வேறு ஒன்றும்

ஆத்மாவைத் தவிர்ந்த வேறு எவ்விஷயத்திலும்

சேர்ந்து சிந்தியான்

மனத்தை ஈடுபடுத்தி எண்ணக்கடவனல்லன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top